நடிகர் விஜய் நடித்த லியோ உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பாளர் எஸ்எஸ் லலித்குமார். இவரது மகன் நடிகராக அறிமுகமான படம் சிறை. இந்த படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். கடந்த 25ம் தேதி வெளியான சிறை படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைத்து வருகிறது. இந்த ஆண்டின் இறுதியில் வந்த சிறந்த படம் சிறை என்றும் பாராட்டப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் அறிமுகமான நடிகர் அக்சய் குமார் இன்னும் ஒரு படத்தில் கமிட் ஆகி இப்போது பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் மிக முக்கியமான ஒரு கேரக்டரில் மலையாள நடிகர் பசில் ஜோசப் நடிக்கிறார். இவர் மலையாளத்தில் முக்கியமான ஒரு இயக்குனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் மலையாளம் என 2 மொழிகளில் இந்த படம் உருவாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
