மலேயசியாவில் இன்று நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதற்காக விஜய் மற்றும் படக்குழுவினர் மலேசியாவில் முகாமிட்டுள்ள நிலையில், தற்செயலாக நடிகர் அஜித்குமாரும் கார் பந்தயப் பயிற்சிக்காக (Racing) தற்போது மலேசியாவிலேயே தங்கியுள்ளார்.
ரேஸிங் அட்டவணையின்படி அஜித்திற்கு இன்று போட்டிகள் ஏதும் இல்லாததால், அவர் தனது நண்பரான விஜய்யின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வாரா என்ற எதிர்பார்ப்பு கோலிவுட் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது. நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழ் திரையுலகின் இரு பெரும் துருவங்களும் ஒரே மேடையில் தோன்றுவார்களா என்பதை அறிய ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
