உடல்நிலை மோசம்… தவெக நிர்வாகி அஜிதா ICUவில் அனுமதி… விஜய்க்கு பேரதிர்ச்சி…!!

By Soundarya on மார்கழி 27, 2025

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கக் கோரி தர்ணாவில் ஈடுபட்ட கட்சி நிர்வாகி அஜிதா, திடீரென தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து உடனடியாக மீட்கப்பட்ட அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். முதலில் சாதாரண வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிகிறது.

அஜிதாவின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டுள்ளார். மாவட்டப் பொறுப்பு தொடர்பாக கட்சி நிர்வாகி ஒருவரே இத்தகைய விபரீத முடிவை எடுத்தது தவெக வட்டாரத்திலும், அக்கட்சியின் தலைவர் விஜய்க்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தூத்துக்குடி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.