ஜனநாயகன் படத்தின் இசை வௌியீட்டு விழா தளபதி கச்சேரி என்ற பெயரில் இன்று மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறுகிறது. 85 ஆயிரம் பார்வையாளர்கள் இடவசதி கொண்ட புக்கித் ஜலீல் ஸ்டேடியத்தில் இந்த விழா மிக பிரமாண்டமாக நடக்கிறது.
இந்த விழாவில் விஜய் படங்களின் இசை கச்சேரி மற்றும் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா என 2 நிகழ்ச்சிகளாக இந்த விழா திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இசைக் கச்சேரி நிகழ்ச்சியை நடிகர் ரியோ தொகுத்து வழங்க உள்ளார். விழாவில் நடிகர் விஜய் பேச இருக்கிறார். பல திரை நட்சத்திரங்கள் இந்த விழாவில் கலந்துக்கொள்கின்றனர்.
இந்த விழாவை நேரில் காண மலேசியாவில் உள்ள தளபதி ரசிகர்கள் விழா திடல் பகுதியில் திரண்டு வருகின்றனர். இதனால் புக்கித் ஜலீல் ஸ்டேடியம் அமைந்துள்ள மலேசியா ரோட்டில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் நெரிசல் நீடிக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
