ரயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் நடுவில் சிக்கிய தாய்…! குழந்தைகளுக்காக போராடிய பிரமிளா…. ரியல் ஹீரோவாக மாறிய பாதுகாப்பு வீரர்… திக் திக் நிமிடங்கள்…!!

By Devi Ramu on மார்கழி 27, 2025

Spread the love

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற பிரமிளா என்ற பெண், எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடைப்பட்ட இடைவெளியில் விழுந்தார். விழுப்புரம் செல்ல தனது இரண்டு குழந்தைகளுடன் வந்த அவர், ரயில் நகரத் தொடங்கியதைக் கண்டு அவசரமாக ஏற முயன்றபோது இந்த விபத்து நேர்ந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள் அலறிய நிலையில், அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த ஆர்.பி.எஃப் காவலர் தயாநிதி உடனடியாக விசிலடித்து ஓட்டுநருக்குச் சிக்னல் கொடுத்து ரயிலை நிறுத்தச் செய்தார்.

காவலர் தயாநிதியின் சமயோசித புத்தியால், பிரமிளா ரயிலின் சக்கரங்களுக்குள் சிக்காமல் நூலிழையில் உயிர் தப்பினார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்; தற்போது அவர் அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காவலரின் இந்தத் துணிச்சலான செயலை ரயில்வே உயர் அதிகாரிகளும் பொதுமக்களும் பாராட்டி வரும் நிலையில், ஓடும் ரயிலில் ஏறுவதைத் தவிர்க்குமாறு ரயில்வே நிர்வாகம் பயணிகளை அறிவுறுத்தியுள்ளது.