திமுகவை ஓவர் டெக் செய்ய இபிஎஸ் போட்ட மாஸ்டர் பிளான்… அதிரடியாக களமிறங்கும் அதிமுக குழு… ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த எடப்பாடி…!

By Nanthini on மார்கழி 27, 2025

Spread the love

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த அதிமுக இந்த முறை வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது. இதற்காக முதலில் தேசிய கட்சியான பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிமுக தற்போது மூன்றாம் நிலை கட்சிகளான பாமக, தேமுதிக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகளை கூட்டணியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதே சமயம் மக்களை சந்திக்கும் பணிகளையும் மேற்கொண்டு வரும் இபிஎஸ் பாதி அளவு தொகுதிகளில் மக்கள் சந்திப்பை முடித்து விட்டார்.

மீதம் இருக்கும் தொகுதிகளில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பரப்புரை மேற்கொண்டு வருகின்றார். இவ்வாறு பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் அதிமுக தற்போது புதிதாக 10 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. இந்த குழுவில் முன்னாள் அமைச்சர்களான அதிமுக துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன், அனைத்து உலகை எம்ஜிஆர் மன்ற செயலாளர் பொன்னையன், தேர்தல் பிரிவு செயலாளர் ஜெயராமன், அமைப்பு செயலாளர்கள் ஜெயக்குமார், விழுப்புரம் மாவட்ட செயலாளர் சிவி சண்முகம் எம்பி, முன்னாள் அமைச்சர் செம்மலை, மகளிர் அணி செயலாளர் வளர்மதி, அமைப்புச் செயலாளர் ஓ எஸ் மணியன், ஆர்பி உதயகுமார், எஸ் எஸ் மணியன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

   

இந்தக் குழு தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நிலையில் இவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து அதனை தேர்தல் அறிக்கையில் சேர்ப்பதற்கான வேலைகளில் ஈடுபடுவார்கள். ஆளும் கட்சியான திமுக தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக கனிமொழி எம்பி தலைமையில் ஒரு குழு அமைத்துள்ள நிலையில் அதனை பின்னுக்கு தள்ள எடப்பாடி பழனிச்சாமி தற்போது புதிய வியூகத்தை கையில் எடுத்துள்ளார்.