சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு பங்கேற்க வந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது லோகேஷ் கனகராஜ் கூறியதாவது, எந்த படமாக இருந்தாலும் விமர்சனங்கள் வரும். அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். கூலி படம் குறித்த விமர்சனங்களை மதிக்கிறேன். கூலி படத்துக்கு பின் வேறு வேலைகளில் பிஸியாக இருந்தேன். அதனால் அதுகுறித்து பேசவில்லை.
ஆயிரம் விமர்சனங்கள் வந்தாலும் அடுத்த படத்தில் தவறுகளை சரி செய்வேன். அதேசமயம் விமர்சனங்களை தாண்டி கூலி படம் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக தயாரிப்பாளர் சொன்னார். அதனால் அனைவருக்கும் நன்றி. என் அடுத்த படங்கள் குறித்து படம் தயாரிக்கும் கம்பெனிகள் அறிவிக்கும் என்று அவர் கூறியிருக்கிறார். இந்த ஆண்டில் வெளியான கூலி படம் மிக மோசமான விமர்சனங்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
