திடீர் ட்விஸ்ட்… 2026 தேர்தலில் பாமக கூட்டணி… சற்றுமுன் அன்புமணி பரபரப்பு பேட்டி…!

By Nanthini on மார்கழி 27, 2025

Spread the love

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் பாமகவில் யார் கையில் அதிகாரம் உள்ளது என்று தெரியாத நிலைமை தான் தற்போது நீடிக்கிறது. தந்தை மகனின் சண்டை டெல்லி உயர்நீதிமன்றம் வரை சென்று அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. கட்சியின் நிறுவனரான ராமதாஸ் தன்னுடைய பேரன் முகுந்தனை இளைஞரணி தலைவர் பதவியில் அமர்த்தியதை விரும்பாத அன்புமணி அதனை மேடையிலேயே வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து பல பிரச்சனைகள் அரங்கேற தன்னுடைய மகள் காந்திமதியை கட்சியின் செயல் தலைவர் பதவியில் ராமதாஸ் அமர்த்தினார். இது அன்புமணிக்கு ராமதாஸ் உடனான மோதலை மேலும் அதிகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ராமதாஸ் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கினார்.

இதனை தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட அன்புமணிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை சட்டரீதியாக எதிர்கொள்ள ராமதாஸ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இதனை விசாரித்த நீதிமன்றம் பாமகவில் யார் தலைவர் என்பதில் குளறுபடிகள் இருப்பதால் தேர்தல் நேரத்தில் வேட்புமனுவில்  யார் கையெழுத்திடுவது என்ற பிரச்சனையும் வரும். இதனால் பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கி வைக்கப்படுகிறது என தீர்ப்பு வழங்கியது. இப்படி இருக்கையில் பாமக யாருடன் கூட்டணி என்பதில் ஒரு தெளிவான முடிவு இல்லை. ராமதாஸ் திமுக பக்கமும் அன்புமணி அதிமுக பக்கமும் தன்னுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

   

இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. பேசிக்கொண்டே இருக்கின்றோம். தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளது. விரைவில் கூட்டணி பற்றிய அறிவிப்பை வெளியிடுவோம். இன்று கூட்டணி குறித்து எதுவும் பேச முடியாது. பெரிய கூட்டணி, பலமான கூட்டணி, மெகா கூட்டணி அமையும். எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறுவோம். இந்த தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார். இதன் மூலம் திமுகவுடன் பாமக கூட்டணி வைக்கப் போவதில்லை என்பது ஏறத்தாழ உறுதியாகி உள்ள நிலையில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.