தமிழகத்தில் ஒப்பந்த நர்சுகளுக்கு ஒரு வருடம் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு எம்ஆர்பி ஒப்பந்த நர்சுகளுக்கு தொடர்ச்சியாக பணி நிரந்தரம் செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி இதுவரை 4,825 ஒப்பந்த நர்சுகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மீதமுள்ள 8000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த நர்சுகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்ததால் ஆயிரம் ஒப்பந்த நர்சுகள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
விரைவில் அனைவருக்கும் ஆணை வழங்கப்படும். போராட்டத்தில் ஈடுபட்ட சங்கத்தின் மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். எனவே எம்ஆர்பி நர்சுகளுக்கு ஒரு வருடம் மகப்பேறு விடுப்பு வழங்கும் அரசாணை விரைவில் வெளியிடப்படும். நீதிமன்ற உத்தரவுப்படி இதற்கு முன்பு மகப்பேறு விடுப்பு எடுத்தவர்களுக்கும் நிலுவைத் தொகை வழங்கப்பட உள்ளது. பொங்கலுக்கு முன்பு இந்த பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் மேல் அக்கறை கொண்ட அரசாக திமுக உள்ளதாகவும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
