மக்களே உஷார்..! புதிய 500 ரூபாய் நோட்டு.. வந்தது மிக முக்கிய அலெர்ட்..!!

By Soundarya on மார்கழி 27, 2025

Spread the love

திருச்சி மாவட்டம் ஆண்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியின் ஏடிஎம்  இயந்திரத்தில் ஒருவர் 12 போலி 500 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்துள்ளார். இந்த விஷயம் வங்கி மேலாளரின் புகாரின் பேரில் வெளிச்சத்திற்கு வந்தது. விசாரணையில், போலி நோட்டுகளைத் தயாரித்து புழக்கத்தில் விட்டவர் அப்பகுதியைச் சேர்ந்த மளிகை கடைக்காரர் ராஜேந்திரன் என்பது தெரியவந்துள்ளது. அவர் பயன்படுத்திய உயர்தர இயந்திரங்கள் ஏடிஎம் மெஷினையே ஏமாற்றும் வகையில் துல்லியமாக இருந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ராஜேந்திரனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த போலி நோட்டுகள் மற்றும் அவற்றை அச்சிட பயன்படுத்திய கருவிகளைப் பறிமுதல் செய்துள்ளனர். ஏடிஎம் இயந்திரங்களில் கூட போலி நோட்டுகளை அடையாளம் காண முடியாத நிலை இருப்பதால், பொதுமக்கள் ரூபாய் நோட்டுகளைக் கையாளும்போது மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.