கட்டிடப் புதுப்பித்தல் பணிகள் நடைபெறும் இடங்களில் மிகுந்த எச்சரிக்கை அவசியம், குறிப்பாக சிறு குழந்தைகள் இத்தகைய சூழல்களில் உயிரிழப்பு ஏற்படும் அபாயத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்த இக்கட்டான தருணங்களில் சமயோசிதமாகச் செயல்பட்டு உயிரைக் காக்கும் மனிதர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதற்குச் சான்றாக ஒரு பாதுகாவலரின் வீரம் செறிந்த செயல் தற்போது வைரலாகி வருகிறது. பழுதுபார்க்கப்பட்டு வரும் ஒரு கட்டிடத்தின் லிஃப்ட் இடைவெளியில் குழந்தை ஒன்று தவறி விழப்போகும் பதற்றமான சூழலை அந்த வீடியோ காட்சிப்படுத்துகிறது.
View this post on Instagram
அந்த வீடியோவின் நாயகனாகத் திகழும் பாதுகாப்பு காவலர், லிஃப்ட் இடைவெளியை நோக்கி குழந்தை செல்வதைக் கண்டதும் சற்றும் பதற்றமடையாமல் மிகுந்த விழிப்புடன் செயல்படுகிறார். தவறான முடிவு எதையும் எடுத்துவிடாமல், சரியான நேரத்தில் பாய்ந்து சென்று அந்தச் சிறு குழந்தையைத் தனது கைகளில் ஏந்தி காப்பாற்றுகிறார். ஒரு நொடி தாமதித்திருந்தாலும் அசம்பாவிதம் நடந்திருக்கக்கூடிய நிலையில், தனது உயிரையும் பொருட்படுத்தாது அந்தப் பாதுகாவலர் ஆற்றிய வீரச்செயல் இணையத்தில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
