ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி அல்லது முகவரி போன்ற விவரங்களைத் திருத்த விரும்புவோர், இந்திய அடையாள ஆணையம் (UIDAI) வெளியிட்டுள்ள 2026-க்கான புதிய வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். இனி ஆதார் விவரங்களை மாற்ற அடையாளச் சான்று, வசிப்பிடச் சான்று மற்றும் பிறந்த தேதிக்கான அசல் ஆவணங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஆதார் எண்கள் இருந்தால், முதலில் எடுக்கப்பட்ட எண் மட்டுமே செல்லும்; மற்றவை தானாகவே ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் ஆதார் விவரங்களை ‘my Aadhaar’ இணையதளம் வாயிலாக எந்தக் கட்டணமும் இன்றி இலவசமாகவே புதுப்பித்துக் கொள்ளலாம்.
அடையாளச் சான்றாகப் பான் கார்டு அல்லது வாக்காளர் அட்டையையும், முகவரிச் சான்றாக வங்கிப் புத்தகம் அல்லது மின்சார ரசீதுகளையும் பதிவேற்றலாம். வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் ஐந்து வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் இந்த புதிய நடைமுறைகள் பொருந்தும் என்பதால், அனைவரும் தங்கள் விவரங்களைச் சரியாகப் புதுப்பித்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
