தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் இதுவரை 92,626 படிவங்கள் பெயர் சேர்ப்பு, 1,007 படிவங்கள் பெயர் நீக்கம் செய்வதற்காக அளிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த வாக்காளர்கள் தவிர சுமார் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு அவர்கள் மீண்டும் சேர இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான கால அளவு உள்ளதால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் குறைவான பெயர் சேர்ப்பு ஆறாம் எண் படிவங்கள் தான் வந்துள்ளது. இப்படியான நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும் மற்றும் திருத்தம் செய்யவும் 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
அதன்படி இந்த சிறப்பு முகாம் இன்று டிசம்பர் 27 மற்றும் நாளை டிசம்பர் 28 ஆகிய தேதிகளிலும், பிறகு ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளிலும் தமிழக முழுவதும் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் நடைபெறும். இந்த முகாமில் தேவையான ஆவணங்களுடன் சென்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும் மற்றும் திருத்தம் செய்யவும் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 6.11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
