அடுத்த பரபரப்பு… அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்… இபிஎஸ் வெளியிட்ட அறிக்கை… செம ஷாக்கில் நிர்வாகிகள்…!

By Nanthini on மார்கழி 26, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதனால் இபிஎஸ் மீது கட்சி நிர்வாகிகள் பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் நிலையில் தனக்கு எதிராக போர் கொடி தூக்குபவர்களை ஈபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கி வருகின்றார். அதன்படி அதிமுகவின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் சமீபத்தில் கட்சியிலிருந்து மொத்தமாக நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து கட்சியில் களை எடுக்கும் பணியில் இபிஎஸ் களம் இறங்கியுள்ளார்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அதில், வடசென்னை தெற்கு மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் பாசறை செயலாளர் லண்டன் வெங்கடேஷ் மற்றும் முன்னாள் செயலாளர் விசுவாசி, துறைமுகம் கிழக்கு நிர்வாகி கலையரசு ஆகியோர் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கட்சியினர் யாரும் அவர்களுடன் எந்த தொடர்பும் வைக்கக்கூடாது என்று இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். இவர்களின் இந்த நீக்கம் தமிழக அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.