ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை… வந்தாச்சு HAPPY NEWS…. தமிழக அரசு அதிரடி..!

By Nanthini on மார்கழி 26, 2025

Spread the love

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில் விடுபட்ட பெண்களுக்கு மீண்டும் மகளிர் தொகை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக மகளிர் உரிமைத் தொகைக்கு விடுபட்டவர்கள் விண்ணப்பித்து வந்தனர். அவர்களில் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி 17 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மீண்டும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது.

   

இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட பெண்கள் மேல்முறையீடு செய்து வருகின்றன. அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் மேல் முறையீட்டு மனுக்கள் மீதான ஆய்வுப் பணிகளை அரசு முடுக்கி விட்டுள்ளது. இதில் உங்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டால் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும். அதன் பிறகு மாதம் தோறும் 15ஆம் தேதி உங்களுடைய வங்கி கணக்கிலும் ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.