“அருமையான சின்னம்” விஜய் கட்சியின் சின்னம் இதுவா..? தமிழக அரசியலில் பரபரப்பு..!!

By Soundarya on மார்கழி 26, 2025

Spread the love

2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வரும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எந்தச் சின்னம் ஒதுக்கப்படும் என்பது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக தரப்பில் ஆட்டோ மற்றும் விசில் உள்ளிட்ட சின்னங்கள் தேர்தல் ஆணையத்திடம் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், தவெகவிற்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தனியார் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மக்கள் மத்தியில் எளிதில் சென்றடையக்கூடிய சின்னத்தையே கட்சித் தலைமை விரும்புவதால், விசில் சின்னம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் நடைபெற்ற கட்சி ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தவெக பொதுச்செயலாளர் கே.ஏ.எஸ். ஆனந்த், “எங்களுக்கு ஒரு அருமையான சின்னம் கிடைத்துள்ளது. ஆனால் அதனை இப்போது வெளிப்படையாகச் சொல்ல மாட்டோம்,” என்று சஸ்பென்ஸ் வைத்திருந்தார். 2025 டிசம்பர் மாத இறுதியில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், புத்தாண்டு பரிசாகத் தனது தொண்டர்களுக்குச் சின்னம் குறித்த அறிவிப்பை விஜய் வெளியிடுவார் என்று தெரிகிறது.