ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் இன்று காலை பயங்கர சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. திருப்பதியில் இருந்து ஹைதராபாத் சென்று கொண்டிருந்த குவாலிஸ் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பை கடந்து எதிர் திசையில் வந்த தனியார் பேருந்து மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் முற்றிலும் நொறுங்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் காரில் பயணித்தவர்கள் என்று தெரிகிறது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இந்த விபத்து குறித்து தற்போது வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த நவம்பர் மாதத்தில் கர்நூல், நேற்று காலை சித்திரதுர்கா பகுதியில் ஆம்னி பேருந்து விபத்தின் துயரம் மறைவதற்குள் அடுத்த விபத்து நிகழ்ந்துள்ளது.
