தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் இறங்கினர். திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 311 ஊதிய முரண்பாடுகளை களைவது என்ன ஆனது என முழக்கங்களை எழுப்பினார். முன்னதாக MRB செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது கவனிக்கத்தக்கது.
