படையப்பாவை தொடர்ந்து ரஜினியின் அந்த விண்டேஜ் படம் ரி ரிலீஸ் ஆகிறதா? – அட்ரா சக்க… என உற்சாகமான சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்!

By Elango on மார்கழி 26, 2025

Spread the love

நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளில் கடந்த 12ம் தேதி ரி ரிலீஸ் செய்யப்பட்ட படையப்பா படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படையப்பா படம் இதுவரை 15 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த நிலையில், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 1999ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட இந்த படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூ. 5 கோடிதான் என்பது குறிப்பிடத்கக்கது.

படையப்பா படத்தை அடுத்து சத்யா மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் ஜெகநாதன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1982ம் ஆண்டு வெளியான மூன்று முகம் படம் அடுத்த ஆண்டில் ரி ரீலீஸ் செய்யப்படுகிறது. இதில் மீண்டும் விண்டேஜ் ரஜினியை திரையில் காண அவரது ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

   

மூன்று முகம் படத்தில் ரஜினி 3 வேடங்களில் நடித்திருக்கிறார். அலெக்ஸ் பாண்டியன், அருண், ஜோன் ஆகிய 3 மாறுபட்ட கதாபாத்திரங்களில் அவரது நடிப்பு பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் 250 நாட்கள் ஓடிய பெரிய வெற்றிப் படமாகும். இந்த படத்தில் 3 வேடங்களில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை ரஜினிகாந்த் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.