விஜய் செய்த அந்த விஷயத்தை நான் அப்படிதான் பார்க்கிறேன் – நடிகர் விஜய் குறித்து ஓபனாக விமர்சனம் செய்த நடிகர் கிச்சா சுதீப்!

By Elango on மார்கழி 26, 2025

Spread the love

கன்னட சினிமாவில் முன்னணி நட்சத்திர ஹீரோவாக வலம் வருபவர் கிச்சா சுதீப். தமிழில் புலி படத்தில் நடிகர் விஜய் உடன் நடித்திருக்கிறார். இப்போது மார்க் என்ற படத்தில் அவர் நடித்திருக்கிறார். அந்த படம் தமிழில் தற்போது ரிலீசாகி உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் கிச்சா சுதீப் விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு சென்றது பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

அப்போது கிச்சா சுதீப் கூறியதாவது, ஒரு பெரிய நட்சத்திரம் அரசியலுக்கு வருவது மக்கள் மற்றும் சமூகத்தின் மீதான அக்கறையை காட்டுகிறது. சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போது அதை விட்டு விட்டு அரசியலுக்கு வருவது சாதாரண விஷயம் அல்ல என்று கிச்சா சுதீப் நடிகர் விஜய் குறித்து பேசி இருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.