அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 8 தொகுதிகள்… அந்த கட்சிக்கு அழிவு காலம்… சாபம் விட்ட பிரேமலதா விஜயகாந்த்…!

By Nanthini on மார்கழி 26, 2025

Spread the love

அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள் என்ற தொகுதி பங்கீடு பட்டியல் வெளியாகியது. அதன்படி அதிமுக 170 தொகுதிகளிலும், பாஜக மற்றும் பாமக 23 தொகுதிகளிலும், தேமுதிக மற்றும் அமமுகவுக்கு தலா 6 தொகுதிகளும், ஓபிஎஸ் மற்றும் ஜிகே வாசன் ஆகியோருக்கு தலா 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு பிரேமலதா விஜயகாந்த் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த தகவலை கொடுத்த கட்சிக்கு அழிவு காலம் தொடங்கி விட்டதாகவும் அவர் சாபம் கொடுத்துள்ளார். மேலும் வருகின்ற ஜனவரி ஒன்பதாம் தேதி கடலூரில் தேமுதிக மாநாடு நடைபெற உள்ளதாகவும் அந்த மாநாட்டின் போது தங்களின் நிலைப்பாடு மற்றும் கூட்டணி குறித்து அறிவிப்போம் என்றும் பிரேமலதா விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.