திட்டக்குடி அருகே நேற்று அரசு பேருந்து கார்கள் மீது மோதிய விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். அதனைப் போலவே திருவண்ணாமலை அடுத்த ராஜந்தாங்கலில் இன்று காலை அரசு பேருந்து கார் மீது மோதியதில் காரில் பயணித்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு அருகே இரண்டு அரசு பேருந்துகளுக்கு இடையில் சிக்கிய இரண்டு இளைஞர்கள் துளி துடித்து உயிரிழந்தனர்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நாளில் தமிழகத்தில் அரசு பேருந்துகள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கியது மக்கள் மத்தியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாகவே தமிழகத்தில் அரசு பேருந்துகள் விபத்தில் சிக்குவதும் அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
