அதிர்ச்சி..! பெண்ணிடம் அத்துமீறிய பிரபல இயக்குநர் அதிரடி கைது…!!

By Soundarya on மார்கழி 25, 2025

Spread the love

திருவனந்தபுரத்தில் சர்வதேச திரைப்பட விழாவிற்கான படங்களைத் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது அங்கிருந்த விடுதியில் தங்கியிருந்த ஒரு பெண் கலைஞரின் அறைக்குள் அத்துமீறி நுழைந்த இயக்குனர் குஞ்சு முகமது, அவரிடம் தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. மலையாளத் திரைப்படத் துறையில் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், திருவனந்தபுரம் மியூசியம் காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். நேற்று (டிசம்பர் 24, 2025) அவரை அதிரடியாகக் கைது செய்த போலீசார், நீண்ட விசாரணைக்குப் பிறகு ஜாமினில் விடுவித்தனர். இந்தப் புகாரைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த திரைப்பட விழா தேர்வுக் குழுத் தலைவர் பதவியிலிருந்து அவர் நீக்கப்படவோ அல்லது விலகவோ வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது .