பிரபலமான ‘தி லயன் கிங்’ (The Lion King) இசைநாடகத் தொடர் மூலம் சர்வதேச அளவில் கவனம் பெற்ற இளம் நடிகை இமானி ஸ்மித்(25) அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள தனது வீட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இமானி ஸ்மித்தை அவரது காதலன் ஜோர்டான் டி. ஜாக்சன் என்பவரே கொலை செய்ததாக அமெரிக்கப் போலீசார் தெரிவித்துள்ளனர். தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு ஜாக்சனை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அமெரிக்க ஊடகத் தகவலின்படி, இவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்ததாகக் கூறப்படுகிறது.
நடிகை இமானிக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது மர்ம மரணம் குறித்துப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. மிகக் குறைந்த வயதிலேயே கலையுலகில் தடம் பதித்த இமானியின் திடீர் மறைவு குறித்துப் பல ஹாலிவுட் பிரபலங்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்
