காரைக்காலைச் சேர்ந்த 23 வயது மாடல் அழகி ஒருவரை, இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான திருச்சியைச் சேர்ந்த ‘மகிமை நாயகம்’ என்பவர் காதலிக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். அந்தப் பெண் காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர், அழகியின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து இணையதளத்தில் பதிவிட்டுப் பழிவாங்கியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்ததைத் தொடர்ந்து, பல போலி கணக்குகள் மூலம் டார்ச்சர் கொடுத்த அந்த இன்ஸ்டா பிரபலத்தை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்ஸ்களைக் கொண்ட இவர், சினிமா வாய்ப்புத் தருவதாகக் கூறி பல பெண்களை ஏமாற்றி வந்ததும் விசாரணையில் அம்பலமானது.
ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தபோது கையும் களவுமாகப் பிடிபட்ட மகிமை நாயகத்திடமிருந்து அவரது செல்போனைப் பறிமுதல் செய்த போலீசார், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
