பிரியங்கா தேஷ்பாண்டே கர்ப்பமாக இருக்கிறாரா? கேபிஒய் தீனா வெளியிட்ட வீடியோ!

By Elango on மார்கழி 25, 2025

Spread the love

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஸ்டார் மியூசிக் குக் வித் கோமாளி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் விஜே பிரியங்கா தேஷ் பாண்டே. அவரது முதல் திருமணம் ஏமாற்றத்தில் முடிந்தது. சில மாதங்களுக்கு முன்பு டிஜே வசி என்பவரை பிரியங்கா 2வது திருமணம் செய்தார். பிரியங்காவுக்கும் வசிக்கும் 10 வயதுகள் வித்தியாசம் என்றும் ஏற்கனவே வசி திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்றும் கூறப்பட்டது.

திடீரென பிரியங்கா வசியை திருமணம் செய்து கொண்டதால் பல்வேறு வதந்திகள் பரவியது. குறிப்பாக பிரியங்கா கர்ப்பமாக இருந்தால்தான் அவசரமாக இந்த திருமணம் நடந்தது என்றும் கூறினார்கள். இந்நிலையில் விஜய் டிவி பிரபலம் கேபிஒய் தீனா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த நிலையில் பிரியங்காவுடன் எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

   

அந்த வீடியோவில் பிரியங்கா என்னுடைய குழந்தையை பார்க்க வந்திருக்கிறார். அவரை விரைவில் என் குழந்தை ஆன்ட்டி என்று கூப்பிடுவார். ஏற்கனவே ஆன்ட்டி என்றுதான் கூப்பிடுகிறார்கள். அதனால் பிரியங்கா கர்ப்பமாக இருக்கிறாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.