Shocking video: “ரொம்ப மனஉளைச்சலா இருக்கு” வீடியோ பதிவு செய்துகொண்டிருந்தபோதே தற்கொலை செய்த இளம்பெண்… பரிதவித்து நிற்கும் 2 குழந்தைகள்…!!

By Soundarya on மார்கழி 24, 2025

Spread the love

கர்நாடக மாநிலம் பல்லாரியில் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட  சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த 23 வயது இளம் தாய், தான் தற்கொலை செய்து கொள்வதை வீடியோவாகப் பதிவு செய்துகொண்டே தூக்கிட்டு உயிர் மாய்த்துக் கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். உயிரிழந்த பெண்ணின் காதலரான முகமது ஷேக் என்பவர் அளித்த மன உளைச்சல் மற்றும் துன்புறுத்தல் காரணமாகவே அவர் இந்த விபரீத முடிவை எடுத்ததாகக் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தற்கொலைக்கு முன் அந்தப் பெண் பதிவு செய்த வீடியோவில், தனது மனவேதனையையும் தான் அனுபவித்த துன்பங்களையும் வெளிப்படுத்தியுள்ளார். இது வழக்கின் முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது. குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள முகமது ஷேக்கைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.