நானும் ரஜினியும் காதலித்தோமா? எம்ஜிஆர் அழைத்து கண்டித்தாரா? – பல ஆண்டுகளுக்கு பின் உண்மையை சொன்ன நடிகை லதா!

By Elango on மார்கழி 24, 2025

Spread the love

புரட்சித் தலைவர் எம்ஜிஆருடன் பல்லாண்டு வாழ்க நாளை நமதே நினைத்ததை முடிப்பவன் உரிமைக்குரல் உள்ளிட்ட பல படங்களில் ஜோடியாக நடித்தவர் நடிகை லதா. இவரை நடிகர் ரஜினிகாந்த் காதலித்ததாகவும் அப்போது எம்ஜிஆர் ரஜினியை அழைத்து நேரில் கண்டித்ததாகவும் பல வருடங்களாக ஒரு தகவல் பரவி வருகிறது.

இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை லதா கூறியதாவது, நான் விஜயகுமார் ரஜினி மூன்று பேரும் ஆயிரம் ஜென்மங்கள் என்ற படத்தில் ஒன்றாக நடித்தோம். ஷூட்டிங்கில் எல்லோரும் ஜாலியாக பேசிக் கொண்டிருப்போம். நாங்கள் மூன்று பேரும் ஒன்றாக பழனி முருகன் கோவிலுக்கு சென்று வந்தோம். அதைத்தான் பெரிய விஷயமாக மாற்றி விட்டார்கள்.

   

நல்ல வேளையாக இப்போது இருப்பது போல் அப்போது யூடியூப் எல்லாம் இல்லை. அதனால் கிசுகிசுவோடு நிறுத்தி விட்டார்கள். இதுவே இந்த காலமாக இருந்திருந்தால் என்னென்னவோ செய்திருப்பார்கள். அதையெல்லாம் கடந்து வந்தாச்சு. இப்போது நாங்கள் நல்ல குடும்ப நண்பர்களாக இருக்கிறோம். எம்ஜிஆருக்கு பின்பு தலைக்கணம் இல்லாத ஒரே நடிகர் என்றால் அது ரஜினி தான் என்று நடிகை லதா கூறி இருக்கிறார்.