“மீண்டும் இணைந்த கூட்டணி” ஒரு குடும்பமாக 2026 தேர்தலைச் சந்திப்போம் – பியூஷ் கோயல் அதிரடி அறிவிப்பு..!!

By Soundarya on மார்கழி 23, 2025

Spread the love

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் மற்றும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்த கூட்டணியை உறுதிப்படுத்தினார். 2026 சட்டமன்றத் தேர்தலை அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் ஒரு குடும்பமாக இணைந்து எதிர்கொள்ளப் போகிறோம்” என அவர் அறிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், மிகுந்த தன்னம்பிக்கையுடன் இந்தத் தேர்தலைச் சந்திக்க உள்ளதாக அவர் தெரிவித்தார் இந்தக் கூட்டணி வரவிருக்கும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த சில காலமாக இரு கட்சிகளுக்கும் இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பியூஷ் கோயல் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையேயான இன்றைய சந்திப்பு அமைந்துள்ளது. இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.