முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெக-வில் இணைந்ததாகக் கூறப்படும் தகவலே அதிமுக-விற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படும் நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக-வின் கோட்டைகளாகக் கருதப்படும் மண்டலங்களில் இருந்து மூன்று முக்கியத் தூண்கள் தவெக-வில் இணையப்போவதாகக் கூறப்படுகிறது. அதன்படி, கொங்கு மண்டலத்தில் அதிமுக-வின் மிக முக்கியமான ஒரு செல்வாக்கான தலைவர். டெல்டா பகுதியில் அந்தப் பிராந்தியத்தில் வலுவான வாக்கு வங்கியைக் கொண்ட ஒரு மூத்த நிர்வாகி. தலைநகரில் கட்சிப் பணிகளில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு முக்கிய முகம்.
இந்த மூன்று நபர்களுமே முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனுக்கு (KAS) இணையான அரசியல் செல்வாக்கும், அனுபவமும் கொண்டவர்கள் என்று அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தவெக தலைவர் விஜய் மேற்கொண்டு வரும் இந்த அதிரடி நகர்வுகள் அதிமுக-வின் கோட்டையை அசைத்துப் பார்க்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
