BREAKING: விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது – பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை..!!

By Soundarya on மார்கழி 23, 2025

Spread the love

அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களில் எந்தவொரு பள்ளியும் (அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள்) மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், மாணவர்கள் மன அழுத்தமின்றி தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள இந்த விடுமுறை அவசியமானது. இசை, நடனம் மற்றும் ஓவியம் ஆகியவற்றில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இந்த விடுமுறை நாட்களை பயன்படுத்தி கற்றுக்கொடுக்கு வேண்டும்.

இந்த தடையை மீறி விடுமுறை நாட்களில் மாணவர்களைப் பள்ளிக்கு வரவழைக்கும் கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது