BREAKING: விடுமுறை.. 3 நாள்களுக்கு ஹேப்பி நியூஸ்…. தமிழக அரசு ஸ்பெஷல் அறிவிப்பு….!

By Nanthini on மார்கழி 23, 2025

Spread the love

தமிழகத்தில் பொதுவாகவே வாழ விடுமுறை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களின் போது அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி தற்போது கடந்த டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கிய அரையாண்டு தேர்வு டிசம்பர் 23 இன்றுடன் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் நாளை முதல் அரையாண்டு விடுமுறை தொடங்குகின்றது. மொத்தம் 12 நாட்கள் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

அரையாண்டு விடுமுறையை முன்னிட்டும் கிறிஸ்துமஸ் விடுமுறையை தொடர்ந்தும் அரசு சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது. அதன்படி இன்றும் நாளையும் சென்னை உட்பட முக்கிய நகரங்களிலிருந்து பிற ஊர்களுக்கு சுமார் 900 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து www.tnstc.in என்ற இணையதளம் அல்லது TNSTC செயலியில் இப்போதே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.