அதிகாலையிலையே கைது… தமிழகத்தில் தொடரும் அவலம்…. இலங்கை கடற்படையினர் அட்டூழியம்…?

By Nanthini on மார்கழி 23, 2025

Spread the love

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது என்பது தொடர் வாடிக்கையாக்கிவிட்டது. அதன்படி தற்போது தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. மற்றொரு பக்கம் தடை செய்யப்பட்ட கச்சதீவு அருகே மீன்பிடித்ததால் 49 மீனவர்கள் நம் நாட்டின் கடலோர காவல் படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்று மீனவர்கள் குடும்பத்தோடு கண்ணீர் வடிக்கிறார்கள்.