அதுதான் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டுதே… அப்புறம் எதுக்கு பணம்? – இசைஞானியை வெளுத்து வாங்கிய பிரபலம்!

By Elango on மார்கழி 23, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இளையராஜா. சமீபகாலமாக அவரது இசையில் உருவான பாடல்களை பயன்படுத்தினால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து கோடிக்கணக்கில் நஷ்ட ஈடு கேட்டு வருகிறார். இதுகுறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியதாவது, எனக்கு தெரிந்து ஒரு வருஷத்துக்கு 40 கோடி ரூபாய் ராயல்டி மூலமாக அவருக்கு வருகிறது.

நான் கேள்விபட்ட வகையில் இளையராஜாவுக்கு இசை ராயல்டி மூலமாக 40 கோடி ரூபாய் ஆண்டுதோறும் வருகிறது. ஒருத்தர் எந்த வேலையுமே செய்யாமல் இதுக்கு முன்னாடி செஞ்ச வேலைக்கு ராயல்டி என்கிற பேர்ல பல வருஷங்களாக 40 கோடி ரூபாய் வந்துகிட்டே இருக்கு. இப்படி பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும் போது உங்களுக்கு எதுக்கு பணம்? அதை வெச்சு என்ன தான் பண்ண போறீங்க? என்று தயாரிப்பாளர் பாலாஜி பிரபு அந்த நேர்காணலில் கோபமாக பேசியிருக்கிறார்.