தமிழகத்தில் இன்று அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் அரையாண்டு தேர்வு முடிவடையும் நிலையில் டிசம்பர் 24 நாளை முதல் ஜனவரி 4 ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற தனியார் பள்ளிகளுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பெற்றோர் நீர்நிலைகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ள பள்ளி கல்வித்துறை டிசம்பர் 5ஆம் தேதி அரையாண்டு விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் மீண்டும் தொடங்கும் என தெரிவித்துள்ளது.
அதேசமயம் அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது உடனடி நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பெரும்பாலும் அரையாண்டு மற்றும் காலாண்டு விடுமுறைகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
