2026 இந்த ராசிக்காரர்களுக்கு கஷ்ட காலம்தான்… பாடாய் படப்போகும் 4 ராசிக்காரர்கள்… ரொம்ப உஷாரா இருக்கணும்…!

By Nanthini on மார்கழி 23, 2025

Spread the love

இன்னும் சில நாட்களில் பிறக்க போகும் புத்தாண்டில் ஜோதிட ரீதியாக பல ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் என்றாலும் ஒரு சில ராசிக்காரர்கள் தங்களுடைய வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்திக்கப் போகிறார்கள். ஏனென்றால் சில ராசியினருக்கு நேர்மறை ஆற்றல் காணப்படும்போது அனைத்து விஷயங்களும் நல்லதாகவே இருக்கும். ஆனால் சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறை ஆற்றல் இருக்கும். அதன்படி புதிதாக பிறக்கும் ஆண்டில் நிதி சிக்கலை சந்திக்கும் மற்றும் கடன் சுமையில் சிக்க போகும் ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்:

   

ரிஷப ராசிக்காரர்களுக்கு புத்தாண்டில் பல பிரச்சனைகள் ஏற்படும். 2026 ஆம் ஆண்டில் கவனமுடன் இருப்பதுடன் கடன் வாங்குவதையும் தவிர்ப்பது நல்லது. பங்குச்சந்தை மற்றும் தொழிலில் முதலீடு ஆகியவற்றை கவனமாக செய்ய வேண்டும். பணம் கொடுக்கல் வாங்குவதில் சிக்கல் ஏற்படுவது உடன் உறவுகளும் விலகி செல்லும். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் குருவின் வக்ரப் பெயர்ச்சி நிதி சார்ந்த சிக்கல்களை ஏற்படுத்தும்.

   

மிதுனம்:

 

இந்த ராசிக்காரர்கள் புத்தாண்டில் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். குரு வக்ரப் பெயர்ச்சியில் நிதி விஷயத்தில் ஏற்பட்ட ஏற்ற இறக்கத்தை காண்பீர்கள். அதாவது புத்தாண்டின் முதல் பாதையில் உங்களுக்கு அனைத்து விஷயங்களும் சாதகமாக காணப்படும். ஆனால் பிற்பாதியில் சனி வக்ர பெயர்ச்சியால் வருமானத்தில் சரிவுகள், தொழிலில் நஷ்டம் ஏற்படலாம். எனவே 2026 ஆம் ஆண்டு நிதி விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

சிம்மம்:

2026 ஆம் ஆண்டில் சிம்ம ராசிக்காரர்களுக்கு முதல் பாதையில் கஷ்டமும் இரண்டாம் பாதியில் சாதகமாகவும் அமையலாம். குரு வக்ர பெயர்ச்சி காரணமாக செலவு அதிகரிக்கும். நீங்கள் செய்யும் செலவுகள் கடனில் சிக்க வைக்கும். ஆகையால் புத்தாண்டில் யாரிடமும் கடன் வாங்காமல் இருப்பது அவசியம். அவ்வாறு வாங்கினாலும் அதனை திருப்பி அடிக்க முடியாமல் பல சிக்கல்கள் ஏற்படும். சொத்துக்கள் விற்று சமாளிக்கும் நிலையும் ஏற்படலாம். ஏனென்றால் சனி பகவானின் வக்ர பெயர்ச்சி முன்னேற்றத்தில் தடையை ஏற்படுத்துவதுடன் நிதி சார்ந்த விஷயத்தில் சிக்கல் வரும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி:

கன்னி ராசியினர் வருகின்ற 2026 ஆம் ஆண்டில் நிதி சார்ந்த பிரச்சனைகள் அதிகரிக்கும். ஆனால் குடும்பத்தில் இருந்த கடன் பிரச்சினைகள் தீர்வதுடன் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் போது கவனமாக இருப்பது அவசியம். 2026 வருடத்தில் கடைசியில் நிதிநிலைமை மேம்படுவதுடன் சொந்த தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளும் உருவாகும்.