‘அம்மா SORRY.. நான் சாகப்போறேன்’, ஒருத்தரையும் சும்மா விடாதா… கடிதம் எழுதிவைத்துவிட்டு குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட நபர்….!

By Nanthini on மார்கழி 23, 2025

Spread the love

தெலுங்கானாவில் நடந்த ஒரு சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதாவது தெலுங்கானாவை சேர்ந்த ஸ்ரீ ஹர்ஷா என்ற நபர் ஜாமின் கையெழுத்திட்டு தனது நண்பருக்கு 13 லட்சம் ரூபாய் கடன் வாங்கி கொடுத்துள்ளார். அவர் கடனை கட்டாததால் கடன் கொடுத்தவர்கள் ஸ்ரீ ஹர்ஷாவிடம் கேட்டு தகராறு செய்துள்ளனர். அவ்வளவு பெரிய தொகையை தன்னால் செலுத்த முடியாததால் மனமுடைந்து போன ஹர்ஷா கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து உள்ளார். ஆனால் தொடர்ந்து கடன் கொடுத்தவர்கள் அவரிடம் தகராறு செய்து வந்தனர்.

இதனால் மனமுடைந்து போன ஹர்ஷா , “மன்னிச்சிரு அம்மா, சாவுக்கு காரணமானவர்களை விட்றாத”என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் இந்த தம்பதிகளுக்கு மூன்று வயது குழந்தை உள்ள நிலையில் தனது மூன்று வயது மகளுக்கும் விஷம் குடிக்க வைத்துவிட்டு இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்போது அந்த மூன்று வயது குழந்தை உயிருக்கு போராடி வருகின்றது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் இருவருடைய உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது