3 நாட்களில் அவதார் பஃயர் அண்ட் ஆஷ் படம் வசூலித்தது இத்தனை ஆயிரம் கோடிகளா? – ஜேம்ஸ் கேமரூன் தரமான சம்பவமா செஞ்சுட்டாரே?

By Elango on மார்கழி 22, 2025

Spread the love

ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் படம் கடந்த 2009ம் ஆண்டில் டிசம்பர் மாதம் வெளியாகி மிகப்பெரிய வசூலை குவித்தது. இந்த படம் 3 ஆஸ்கார் விருதுகளை வென்று வெற்றி வாகை சூடியது. தொடர்ந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு அவதார் படத்தின் 2ம் பாகம் 2021ம் ஆண்டில் அவதார் தி வே ஆஃப் வாட்டர் என்ற டைட்டிலில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. வசூலிலும் சாதனை படைத்தது.

தொடர்ந்து இப்போது அவதார் படத்தின் 3ம் பாகம் அவதார் பஃயர் அண்ட் ஆஷ் என்ற டைட்டிலில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சிகோனி பீவர் ஸ்டீபன் லாங் கெட் வின் லெட் பிரிட்டிஷ் பிரிட்டன் டால்டன் எடி பால்கோ மற்றும் திலீப் ராவ் நடித்திருக்கின்றனர். இந்த படம் கடந்த 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்நிலையில் அவதார் பஃயர் அண்ட் ஆஷ் படம் 3 நாட்களில் உலக அளவில் 3090 கோடி ரூபாய் வசூலில் கடந்திருப்பதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.