ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் படத்தில் முதல் பாகம் கடந்த 2009 டிசம்பர் மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வசூலை குவித்தது. இந்த படம் 3 ஆஸ்கார் விருதுகளையும் வென்றது. தொடர்ந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு அவதார் படத்தின் 2ம் பாகம் அவதார் தி வே ஆஃப் வாட்டர் என்ற டைட்டிலில் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.
தொடர்ந்து இப்போது அவதார் படன் 3ம் பாகம் அவதார் பஃயர் அண்ட் ஆஷ் என்ற படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சிகோனி பீவர் ஸ்டீபன் லாங் கெட் வின் லெட் பிரிட்டிஷ் பிரிட்டன் டால்டன் எடி பால்கோ மற்றும் திலீப் ராவ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்த படம் கடந்த 19ம் தேதி வெளியானது. இந்நிலையில் அவதார் பஃயர் அண்ட் ஆஷ் படம் 2 நாட்களில் உலக அளவில் 1300 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
