75 வயசுல இத்தனை சுறுசுறுப்பு… இன்னும் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் ஹீரோவாக தொடர இதுதான் காரணமா?

By Elango on மார்கழி 22, 2025

Spread the love

நடிகர் ரஜினிகாந்துக்கு இப்போது 75 வயதாகிறது. ஆனால் இன்னும் அவரது சுறுசுறுப்பு குறையவில்லை. படங்களில் ஹீரோவாகவே தொடர்கிறது. இந்நிலையில் அவரது உணவு முறை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்தது வத்தக்குழம்பு. அடிக்கடி வத்த குழம்பு அவர் விரும்பி சாப்பிடுகிறார்.

அந்த வத்தக்குழம்பு நன்றாக கெட்டியாக வெயிலில் காய வைத்த காய்கறிகளுடன் புளி மற்றும் மணத்தக்காளி சேர்த்து தயார் செய்யப்படுகிறது. சூடான சாதம் மற்றும் நெய்யுடன் கலந்து அவர் இதை உட்கொள்கிறார். அடுத்ததாக பால் பாயாசத்தை ரஜினி விரும்பி சாப்பிடுகிறார். பால் கெட்டியாகி தந்தம் நிறம் வரும் வரை கிரீம் போன்று சுவை தரும் வரை அது தயார் செய்யப்படுகிறது. இதற்கு பொறுமையாக இருந்து அதிக நேரம் பாயாசத்தை பாலை காய்ச்சி சுண்ட வைக்க வேண்டும்.

   

அடுத்து ரஜினிக்கு மிகவும் பிடித்தது மாதுளை பழச்சாறு. கடந்த பல ஆண்டுகளாகவே நடிகர் ரஜினிகாந்த் தனது உணவுகளில் உப்பு சர்க்கரை மைதா பால் மற்றும் தயிர் ஆகியவற்றை தவிர்க்கிறார் என்றும் கூறப்படுகிறது. இப்படி ரஜினிகாந்த் தனது உணவு முறையில் அதிக கவனமாக இருந்து வருவதால் தான் அவர் எப்போதுமே சுறுசுறுப்பாக காணப்படுகிறார்.