தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து கட்சிகளும் தற்போது கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளன. அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில் திமுகவும் தனது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. அதேசமயம் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் இதுவரை கூட்டனை குறித்து அறிவிப்பை வெளியிடாமல் உள்ளார்.
அதனைப் போலவே பாமக, தேமுதிக, அமமுக மற்றும் ஓபிஎஸ் அணி ஆகிய கட்சிகள் இன்னும் கூட்டணியை உறுதி செய்யவில்லை. என் நிலையில் தமிழகத்தில் உள்ள கூட்டணிகளுக்கு தலைமை தாங்கும் கட்சிகள் தங்களுடன் பேசி வருவது உண்மைதான் என்று டிடிவி தினகரன் உறுதிப்படுத்தியுள்ளார். அமமுகவை தவிர்த்து விட்டு எந்த ஒரு கட்சியும் ஆட்சியில் அமர முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்..NDA, TVK தரப்பு டிடிவி தினகரனை அணுகி கொண்டே இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
