“யாசகம் பெற்று வாழ்ந்த பெண்….” உல்லாசத்திற்கு அழைத்த 61 வயது முதியவர்…! ஆசைக்கு மறுத்ததால் அரங்கேறிய கொடூரம்…!!

By Devi Ramu on மார்கழி 21, 2025

Spread the love

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில், சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, அவர் மறுத்ததால் கழுத்தை நெரித்துக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த 2-ம் தேதி மருத்துவமனை அருகே உயிரிழந்து கிடந்த அடையாளம் தெரியாத பெண்ணின் சடலத்தைக் மீட்ட போலீசார், உடற்கூறு ஆய்வுக்குப் பின் அது கொலை என உறுதி செய்தனர். விசாரணையில், உயிரிழந்தவர் திருச்சியைச் சேர்ந்த நூர்ஜஹான் என்பதும், அவர் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்ததும் தெரியவந்தது.

   

அதே யாசகர் குழுவில் இருந்த சென்னையைச் சேர்ந்த 61 வயது சதீஷ்குமார் என்பவரைப் பிடித்துப் போலீசார் விசாரித்தபோது, உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. நூர்ஜஹானைத் தவறான உறவுக்கு அழைத்தபோது அவர் சத்தமிட்டதால், பயந்துபோய் அவரது கழுத்தை நெரித்துக் கொன்றதாகச் சதீஷ்குமார் ஒப்புக்கொண்டார்.

   

இதனையடுத்து அவரைக் கைது செய்த பொன்னமராவதி காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.