சீனாவின் ஹாங்சோ (Hangzhou) பகுதியில் கள்ளகாதலியுடன் இருந்தபோது தனது மனைவியிடம் கையும் களவுமாக பிடிபடாமல் இருக்க, நபர் ஒருவர் மேற்கொண்ட ஆபத்தான முயற்சி குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. தனது மனைவியை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணுடன் ஹோட்டலில் இருந்ததாகக் கூறப்படும் அந்த நபர், மனைவி திடீரென வந்ததால் தப்பிக்க முயன்றுள்ளார். ப்பிக்கும் அவசரத்தில், உள்ளாடைகளுடன் ஹோட்டல் ஜன்னல் வழியாக வெளியே குதித்த அவர், அங்கிருந்த ஒரு விளம்பரப் பலகையைப் பிடித்துத் தொங்கியுள்ளார்.
👁️【吊在大楼外的偷情男:其妻子当然知道了,全世界也看到了】
😳 近日,在共匪国杭州,一名男子被发现仅穿内裤,抓住某酒店大楼外的字母悬挂着,当地媒体报道称,他因为妻子当场抓到偷情现场,于是试图以这种方式逃跑⚠️… pic.twitter.com/upEhkgx1DF
— 淘喵先生 (@Baoliaogeming64) December 16, 2025
‘போயு’ (Boyu) என்ற ஹோட்டல் குடியிருப்பின் நான்காவது மாடியில், வெறும் உள்ளாடைகளுடன் அந்த நபர் விளம்பரப் பலகையில் ஒட்டிக்கொண்டிருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
