கன்னியாகுமரி மாவட்டம் அருகே உள்ள பரமாத்மலிங்கபுரம் நேதாஜி நகர் பகுதியில் 11 ஆம் வகுப்பு படித்து வரும் அரசு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக பள்ளி மாணவியை ஊர்மக்கள் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டி செருப்பாலும் கட்டைகளாலும் தாக்கி தற்கொலைக்கு தூண்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பக்கத்து வீட்டுக்காரர் ஆட்டோவில் தன் மகள்கள் பயணம் செய்ததால் ஆட்டோக்காரரின் மனைவி சந்திரா மற்றும் அவருடைய மகள்கள், நீங்கள் எப்படி என் கணவர் ஆட்டோவில் ஏறலாம் என்று கூறி தன் மகளை அடித்து துன்புறுத்தி அவமானப்படுத்தியதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார் என்றும் இதற்கு நீதி வேண்டும் என்று கூறி அவர்களை கைது செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க தீபிகாவின் தாயார் பேட்டி அளித்துள்ளார்.
கன்னியாகுமரி அருகே உள்ள பரமாத்மலிங்கபுரம் நேதாஜி காலனியை சேர்ந்த 40 வயதுடைய விஜயலட்சுமி என்பவருடைய மகள் தீபிகா அதே பகுதியில் உள்ள அரசு பகுதியில் 11 பயின்று வந்தார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய காதலனாக கூறப்படும் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த பெயிண்டர் பிரதீப் என்பவரும் மாணவ இறந்த துயரம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார்.. இதனால் அப்பகுதியில் சோகத்தில் மூழ்கியது. இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என 200க்கும் மேற்பட்டோர் நாகர்கோவிலில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் தங்கள் மகளை தற்கொலைக்குத் தோன்றிய பக்கத்து வீட்டுக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் எஸ்பி அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில், ஆட்டோக்காரரின் மனைவி ஊர் மக்கள் முன்னிலையில் செருப்பாலும் கட்டைகளாலும் மடித்து மகளை அவமானப்படுத்தியதாகவும் இதனை தட்டிக் கேட்கச் சென்ற தன்னையும் அடித்ததாகவும் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த என்னுடைய மகள் அன்று இரவு வீட்டில தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணம் ஆட்டோக்காரரின் மகள் மற்றும் அவருடைய மனைவி சந்திரா ஆகியோர் என்னுடைய மகளின் தற்கொலைக்கு காரணமானவர்கள். எனவே அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கண்ணீர் மல்க அவர் தெரிவித்துள்ளார். தற்போது இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
