ஸ்டாலின் தலையில் பேரிடி… திடீரென போர்க்கொடி தூக்கிய திமுக சீனியர்கள்… உதயநிதியால் வெடித்த புதிய பூகம்பம்..!

By Nanthini on மார்கழி 21, 2025

Spread the love

தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் இந்த முறையும் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் முதல்வர் ஸ்டாலின் பல வியூகங்களை வகுத்து வருகின்றார். தனது கூட்டணி கட்சிகளை பலமாக வைத்திருக்கும் திமுக மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. மறுபக்கம் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு வரும் நிலையில் அவர்களுடனும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது

இந்நிலையில் வருகின்ற 2026 சட்டசபை தேர்தலில் வாரிசுகளுக்கு சீட் வேண்டுமென்ற டிமாண்ட் உடன் திமுக தலைமைக்கு சீனியர்கள் நெருக்கடி கொடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் திருவண்ணாமலையில் நடந்த இளைஞர் அணி மாநாட்டில் 2026 தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று ஸ்டாலினிடம் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். உதயநிதியின் வியூகத்தை தங்களுக்கு சாதகமாக்கி கொண்ட சீனியர்கள் வாரிசுகளுக்கு சீட் வழங்க வேண்டும் என கேட்டு வருகிறார்கள்.