BIG ALERT: WhatsApp யூசர்களுக்கு புது ஆபத்து…. இந்த லிங்க் உங்களுக்கும் வருதா…?

By Nanthini on மார்கழி 21, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு என்னதான் எச்சரிக்கை விடுத்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது புதுவிதமான மோசடி ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. அதாவது நண்பர்களிடம் இருந்து “இந்த போட்டோ பாருங்க”என்று லிங்க் வந்தால் அதை உடனே கிளிக் செய்ய வேண்டாம்.

அது உங்களுடைய கணக்கை முடக்கும் Ghostpairing மோசடியாக இருக்கலாம் என்று CERT– In எச்சரித்துள்ளது. போலியான லிங்க் மூலம் போன் நம்பரை வாங்கும் ஹேக்கர்கள், device linking வசதி மூலம் பாஸ்வோர்ட் இல்லாமலேயே whatsappபை கணினியுடன் இணைத்து தரவுகளை எடுக்கின்றனர். எனவே device linking அடிக்கடி சரிபார்க்க CERT IN அறிவுறுத்தியுள்ளது.