“விஜய் + அதிமுக + பாஜக கூட்டணி”…. 200 தொகுதிகளில் வெற்றி… தமிழருவி மணியன் பரபரப்பு பேட்டி…!

By Nanthini on மார்கழி 20, 2025

Spread the love

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழருவி மணியன் தனது காமராஜர் மக்கள் கட்சியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ரஜினியிடம் பேசியதில் ஒரு கோப்பை மிளகு ரசம் கிடைத்தது. மூன்று வருடங்களாக ரஜினியுடன் மாற்று அரசியல் பேசியதில் மூன்று கோப்பை மிளகு ரசம் கிடைத்தது. கணிசமாக வாக்கு உள்ள விஜய் சிந்திக்க வேண்டும். வெறும் 20% வாக்குகளை வைத்து முதலமைச்சராக முடியாது.

பாஜக மற்றும் அதிமுகவின் 41% வாக்குகளுடன் விஜயும் இணைந்தால் தமிழகத்தில் 200 தொகுதிகளில் வெற்றி பெறலாம். நம்முடைய ஒரே நோக்கம் திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பது தான். தமிழ்நாட்டு மக்கள் நலனை கருதி விஜய் முதலமைச்சர் கனவை தியாகம் செய்துவிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் அணிக்கு வரவேண்டும் என்று தமிழருவி மணியன் அழைப்பு விடுத்துள்ளார். அவருடைய இந்த பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.