வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா?… அப்போ உடனே இதை பண்ணுங்க… தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு…!

By Nanthini on மார்கழி 20, 2025

Spread the love

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் முடிந்து நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இந்த பட்டியலை வெளியிட்டனர். வரைவு வாக்காளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு விட்ட நிலையில் ஒவ்வொரு வாக்காளரும் தங்களுடைய பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை எளிதில் அறிந்து கொள்ள முடியும்..

அதற்கு முதலில் voters.eci.gov.in அல்லது electoralsearch.eci.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

   

அதில் சம்பந்தப்பட்ட நபரின் வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளீடு செய்து வாக்காளரின் பெயர், அவருடைய வயது மற்றும் எந்த தொகுதி என்ற விவரங்களையும் உள்ளீடு செய்யலாம்.

   

பிறகு தேடல் என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் வாக்காளர் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

 

திரையில் உங்களின் பெயர் இருந்தால் அதிகாரப்பூர்வ வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளது என்று அர்த்தம். (சில தொகுதிகளில் கடந்த முறை ஓட்டுப் போட்டு ஓட்டு சாவடிகள் மாறி இருக்கும் நிலையில் அதனையும் அறிந்து கொள்ளலாம்)

ஒருவேளை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் அதற்கான காரணங்கள் குறித்து திருப்தி இல்லை என்றால் ஏதாவது ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் ஜனவரி 18ஆம் தேதி வரை தெரிவிக்கலாம்.

கடந்த முறை வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற தற்போது இடம் மாறியவர்கள் படிவம் எண் 8, புதிதாக சேர்ப்பவர்கள் படிவம் எண் 6 ஆகியவற்றை உரிய முறையில் பூர்த்தி செய்து அதற்கான ஆவணங்களையும் வழங்கி ஜனவரி 18ஆம் தேதிக்குள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக் கொள்ள முடியும்.

அனைத்து செயல்முறைகளும் நிறைவு பெற்ற பிறகு 2026 பிப்ரவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். பட்டியலில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே 2026 சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போட தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.