இரவு சாப்பிடும் உணவில் ரொம்பவும் கவனமாக இருங்க… இல்லேன்னா இந்த 5 வகை நோய்கள் வரும் ஆபத்து அதிகம் – எச்சரிக்கும் டாக்டர்கள்!

By Elango on மார்கழி 20, 2025

Spread the love

காலை உணவைப் போலவே இரவு உணவும் மிகவும் அவசியமானது. ஆனால் இரவு உணவை எளிதாக எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. இரவு உணவு என்றாலே தோசை சப்பாத்தி அல்லது சாதம் சாப்பிடுவது பலரது வழக்கமாக உள்ளது. இரவு நேரத்தில் நம்முடைய உணவு குடல் ஜீரணப்பதை நிறுத்திவிட்டு ஓய்வெடுக்கும். அந்த நேரத்தில் கார்போஹைட்ரேட் ஸ்டார்ச் அதிகம் உள்ள உணவை எடுத்துக் கொள்வது உடலுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

இரவு உணவை பொருத்தவரை சூப் வகைகள் சாலட் பருப்பு லேசான புரதங்கள் ஆகியவற்றை சாப்பிடுவது ஆரோக்கியமாக இருக்கும். இரவு நேர உணவில் செய்யும் தவறுகளால் பலவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

   

நீரிழிவு நோய் வரும் ஆபத்து – மோசமான உணவுப் பழக்கத்தால் நீரிழிவு நோய் ஏற்படும். அதிக கார்ப்பரேட் கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடுவதால் குளுக்கோஸ் அளவு அதிகரித்து ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

   

கெட்ட கொழுப்பு – இரவில் பிரியாணி கபாப் சிக்கன் போன்ற எண்ணெயில் வறுத்த உணவுகளை சாப்பிடுவதால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்.

 

உடல் பருமன் – பிரியாணி மசாலா சேர்ந்த கார்போஹைட்ரேட் உணவு அதிகமாக சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்கும்.

இதய நோய்கள் – இரவு நேரத்தில் மிக தாமதமாக சாப்பிடுவது, தாமதமாக உறங்கச் செல்வதால் உடலில் கார்டிசோல் அதிகரித்து ரத்த அழுத்தத்தால் இதய நோய் ஆபத்துகள் ஏற்படும்.

குடல் இயக்கம் பாதிப்பு – இரவில் அதிக நேரம் கழித்து சாப்பிடுவதால் ஜீரண மண்டலம் பாதிக்கப்பட்டு வாய்வுத் தொல்லை வயிறு உப்புசம் நெஞ்செரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு நாளடைவில் குடல் இயக்கம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படும் என்று டாக்டர்கள் இரவு நேர உணவுகள் குறித்து எச்சரிக்கையாக கூறுகின்றனர்.