காலையிலேயே குட் நியூஸ்… தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு…!

By Nanthini on மார்கழி 20, 2025

Spread the love

தமிழகத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய பண்டிகை நாட்களில் அரசு சார்பில் உள்ள விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாளான டிசம்பர் 24ஆம் தேதி அன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு ஏதுவாக மாவட்ட நிர்வாகம் இந்த மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனை ஈடு செய்ய டிசம்பர் 27 சனிக்கிழமை வேலை நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் ஏதும் செயல்படாத என தெரிவிக்கப்பட்டுள்ளது.